நவரத்னா விருதுகள்

“நவரத்னா விருதுகள்”

வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த தனிமனிதர்கள், குழுக்கள், நிறுவனங்களுக்கு, கடந்த 19-ந்தேதியன்று, சென்னை லீலா பேலசில் நடந்த விழாவில் நவரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுக்கு உரியவர்கள், சார்பு எதுவுமின்றி, மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் பிரபலங்கள் நடுவர்களாக இருந்து, பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன. 

விருது வழங்கும் விழாவில்,  உலக அளவிலும் இந்திய அளவிலும் புகழ் பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக  பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

விழாவில் தமிழர்தம் கலைத் திறனையும் முத்தமிழின் சிறப்பையும் விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய உணவுகளும் இடம் பெற்றன.