“தமிழ் ரத்னா”

உலகின் முதல் மொழி தமிழ். உலகின் மூத்த குடி தமிழ்க்குடி. தமிழருக்கென்று தனி அடையாளம் உண்டு. ‘கற்க கசடறக் கற்பவை’ என்றும், ‘கற்றது கைமண் அளவு’ என்றும் அறிவின் அவசியத்தை உலகுக்கே உணர்த்தியது மட்டுமின்றி,  காதலையும் வீரத்தையும் இரு கண்களாய் போற்றும் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான இலக்கியங்கள், பண்பாடு, விருந்தோம்பல் என தமிழர்தம் அடையாளங்கள் தனித்துவம் பெற்றவை.

நம் அடையாளங்களை பாதுகாப்பதற்காக உழைப்பவர்களையும் தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பு சேர்ப்பவர்களையும் பாராட்டிச் சிறப்பிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த முக்கியமான பணியைச் செய்ய, தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள, நியூஸ் 7 தமிழ்  செய்தித் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பத்து கோடி தமிழர்களில், தமிழருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விளங்கும் ஒருவருக்கு மிக உயரிய விருதான தமிழ் ரத்னா விருது வழங்கப்படுகிறது.